நீரோடை போல் காட்சியளிக்கும் எமரால்டு அணை.
நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டதுடன் அரசு பேருந்து ஓட்டுனரும் உயிரிழந்தது நீலகிரி மாவட்ட மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. புயல்மழை காரணமாக நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்கள் மூன்று நாட்கள் மூடப்பட்டது. பரவலாக மழை பெய்த போதிலும் எமரால்டு அணைக்கு வந்த நீரை பார்க்கும் போது சிரிய நீரோடைபோல் காட்சியளிக்கிறது. எமரால்டு பகுதி மக்கள் கூறுகையில் இந்த வருடம் அணை நிரம்புமா என்பது சத்தேகமே என்பது கருத்தாகும்.
நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்த ஆரஞ்சு அலட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்டம் முழுவதும் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது இதில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கின்ன கொரை பகுதியில் 110 மி.மீ மழை பெய்துள்ளது.
கின்ன கொரை - 110 மி.மீ
கோத்தகிரி - 68 மி.மீ
பர்லியாரு - 59 மி.மீ
எடப்பள்ளி - 54 மி.மி
கோடநாடு - 42 மி.மீ
கீழ் கோத்தகிரி - 41 மி.மீ
கேத்தி - 35 மிமீ
உலிக்கல் - 33 மி.மீ
அப்பர்பவானி - 23 மி.மீ
கிளன்மார்கள் - 22 மி.மீ
குன்னூர் - 21 மி.மீ
கெத்தை 20 மி.மீ
உதகை - 18.5 மிமீ
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment