கோத்தகிரி தாலூக்கா எலக்ரிக்கல் மற்றும் பிளம்பர் சங்க துவக்க விழா.
கோத்தகிரி பகுதியில் பல ஆண்டுகளாக முறைசாரா தொழிலாளர்களாக பணியாற்றி வரும் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் தொழில்களில் இருக்கக்கூடிய தொழிலாளர்களை உள்ளடக்கி சி ஐ டி யுடன் இணைக்கப்பட்டு கோத்தகிரி எலக்ட்ரிகல் மற்றும் பிளமிங் தொழிலாளர் சங்கமானது துவக்கப்பட்டது. இதன் துவக்க விழாவானது தோழர் கே. பாலசுப்ரமணியம் அவர்களின் தலைமையில் கோத்தகிரி நாவா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவினை துவக்கி வைத்து தோழர் மணிகண்டன் அவர்கள் உரையாற்றினார். தோழர் சுரேஷ் வரவேற்பு உரையாற்றினார். தொடர்ந்து புதிதாக துவங்கப்பட்ட தொழிற்சங்கத்தை வாழ்த்தி சிஐடியு போக்குவரத்து மண்டல துணைத் தலைவர் தோழர்.சாமிநாதன், தையல் கலைஞர்கள் சங்க மாவட்ட பொறுப்பாளர் தோழர்.மோகன், கோத்தகிரி வர்ணம் பூசம் தொழிலாளர் சங்க தலைவர் தோழர்.தியாகராஜ், சி ஐ டி யு மாவட்ட துணைத் தலைவர் தோழர்.மகேஷ் உள்ளிட்டோர் உரையாற்றினர்.சிஐடியு வின் மாவட்ட செயலாளர் தோழர் வினோத் அவர்கள் நிறைவுறையாற்றினார். இந்த துவக்க விழாவில் சங்கத்தின் கௌரவ தலைவராக தோழர்.பி பரலோகராஜ், தலைவராக தோழர்.கே பாலசுப்பிரமணியம்,செயலாளராக தோழர்.ஏ கனகராஜ் பொருளாளராக, தோழர் வி. மணிகண்டன் உள்ளிட்ட 19 உறுப்பினர்கள் கொண்ட நிர்வாக கமிட்டி உருவாக்கப்பட்டது. இறுதியாக தோழர் கனகராஜ் அவர்கள் நன்றி உரை கூறி நிறைவு செய்தார். கூட்டத்தில் 250 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கெடுத்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.



No comments:
Post a Comment