விநாயகர் சதுர்த்தி விஷர்ஜன விழா.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள சேலாஸில் ஊர் பொதுமக்கள் சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றன 14 9 2026 முதல் 16 9 2026 வரை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு நேற்று விநாயகப் பெருமானை மேளதாளங்கள் மற்றும் வான வேடிக்கை வழங்க விநாயகர் பஜனை பாடல்கள் கோஷங்கள் விண்ணை பிளக்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் பின்னர் காட்டேரி லாஸ் நீர்வீழ்ச்சியில் சுமார் 15-க்கும் மேற்பட்ட சிலைகள் காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் குன்னூர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சிலைகள் கரைக்கப்பட்டன.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:
Post a Comment