எமரால்டு அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் கொடியேற்ற விழா
நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் வேண்டுவோருக்கு வேண்டும் வரமளிக்கும் எமரால்டு அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் இந்த ஆண்டின் திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்வானது இன்றைய தினம் மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் இனிதே துவங்கியது இந்த நிகழ்வின் போது பங்கு மக்களும் எமரால்டு சுற்றுவட்டார பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர் எமரால்டு அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் பங்குத்தந்தை அவர்கள் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது கூட்டு திருப்பலியை தொடர்ந்து அன்னையின் ஆலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது அதனை தொடர்ந்து பங்கு மக்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது இந்த கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து அனைவருக்கும் எமரால்டு அன்னை வேளாங்கண்ணி மாதாவின் அன்பின் விருந்து பரிமாறப்பட்டது இதனை தொடர்ந்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 20 9 2026 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று எமரால்டு அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் திருவிழாவானது தேர் பவனி உடன் இனிதே நடைபெற உள்ளது இந்த விழாவிற்கு சிறப்பு அம்சமே இப்பகுதியில் வாழும் மும்மதத்தினரும் கலந்து கொள்வது அதேபோன்று ஆலய வளாகத்திலும் இந்துக்களை குறிக்கும் குரியும் இஸ்லாமியரை குறிக்கும் குரியும் கிறிஸ்துவரை குறிக்கும் குரியும் ஆலய வளாகத்தில் ஓளி பதாகையில் ஒருங்கே இடம் பெற்று மும்மதத்தினரும் சேர்ந்து விழாவை சிறப்பிப்பது எமரால்டு பகுதியில் கால காலமாக விளங்கும் ஒற்றுமையை குறிக்கும் வகையில் இருக்கும் என்பது மேலும் இந்த விழாவிற்கு ஒரு சிறப்பு அம்சமாகும்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment