உதகையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு காவல் துறையினரின் அணிவகுப்பு ஊர்வலம்
நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் காவல்துறையினரின் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் உதகையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் நிலையில் காந்தல் பகுதியில் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் துணைக் கண்காணிப்பாளர் அவர்கள் காவல்துறையினரின் அணிவகுப்பு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் ஊர்வலமானது காந்தல் முக்கோணம் பகுதியில் இருந்து காந்தல் மாரியம்மன் கோவில் பகுதி வரை நடைபெற்றது இதில் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும் மற்றும் காவலர்களும் பங்கேற்றனர்.
நீலகிரி மாவட்டம் தமிழக இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:
Post a Comment