அரசு மேல்நிலைப்பள்ளி நஞ்சநாட்டில் முப்பெரும் விழா
அரசு மேல்நிலைப்பள்ளி நஞ்ச நாட்டில் இலக்கிய மன்ற துவக்க விழா- சாதனை படைத்தோருக்கு பரிசளிப்பு விழா- சுதந்திர தின விழா என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது இதில் முன்னதாக என்சிசி முதன்மை அலுவலர் சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார் பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியர் செந்தில் குமார் தலைமை வகித்தார் நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருநாவுக்கரசு சமூக ஆர்வலர் கணேஷ் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர் விழாவில் கடந்த கல்வியாண்டில் 10ம் - 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்தோருக்கு ரொக்க பரிசு, சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது கீழ்க்கவட்டி சுந்தரம் ஆசிரியர் பத்தாம் வகுப்பில் முதல் இடம் பிடித்த தர்னிஷ் இரண்டாம் இடம் பிடித்த ரீனாஸ்ரீ மூன்றாம் பரிசு மதுரவேல் ஆகியோருக்கு ரூபாய் 16,000 ரொக்க பரிசு வழங்கினார் ரவி ஆசிரியர் பன்னிரண்டாம் வகுப்பில் சாதனை படைத்த ஹரிஷ், இனியவன், பிரதீப் ஆகியோருக்கும் தமிழக திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற அட்சயஸ்ரீ-க்கும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது விழாவில் திருக்குறள் லிங்கன், தும்பனட்டி நஞ்சன், நரிகுழி நிர்மல், முருகன், ராமகிருஷ்ணன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் தமிழ் ஆசிரியை பிரேமா வாழ்த்துரை வழங்கினார் முடிவில் ஆசிரியர் நன்றி தெரிவித்தார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment