கோத்தகிரி - சுற்றுச்சூழல் கருத்தரங்கு மற்றும் வினாடி வினா போட்டி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 18 August 2026

கோத்தகிரி - சுற்றுச்சூழல் கருத்தரங்கு மற்றும் வினாடி வினா போட்டி

 


கோத்தகிரி - சுற்றுச்சூழல் கருத்தரங்கு மற்றும் வினாடி வினா போட்டி.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி  புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  சுற்றுச்சூழல் மன்றத்தின்  சார்பாக சுற்றுச்சூழல் கருத்தரங்கு மற்றும் வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை அருட் சகோதரி   அல்போன்சா அவர்கள் தலைமை தாங்கினார்.  சி பி ஆர் சுற்றுச்சூழல் கல்வி மையத்தின் கள இயக்குனர் குமரவேல் அவர்கள் முன்னிலை வகித்தார்.  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே. ஜே. ராஜு அவர்கள் சிறப்பு கருத்தாளராக கலந்து கொண்டு பேசியபோது கூறிய கருத்துக்கள்..... 


 காலநிலை மாற்றத்தின் தாக்கம் வரலாறு காணாத வகையில் உச்சத்தை தொட்டுள்ளது என ஐக்கிய நாடுகள்  சபையின் ஆய்வறிக்கை கூறுகிறது.  கடந்த 150 ஆண்டுகளை ஒப்பிடும்போது பூமியின் சராசரி வெப்பநிலை அதிகபட்சம் 1.5 டிகிரி சென்டிகிரேட் வரை இருக்கலாம்.  இந்த வெப்பநிலையை தாண்டும் போது காலநிலை மாற்றம் மிகப் பேரழிவை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.  கடந்த ஆண்டு வெப்பநிலை 1.55  டிகிரி சென்டி கிரேட்  என தொடர்ச்சியாக இருந்துள்ளது.  இது பூமியின் வரலாற்றில்  காணப்பட்ட மிக அதிகபட்ச வெப்பநிலையாகும்.  உலகில் 100 நகரங்கள் அதிக வெப்ப  நகரங்களாக ஐக்கிய நாடுகள் சபை கண்டறிந்துள்ளது.  அதில் 95 நகரங்கள் இந்தியாவில் தான் உள்ளது . ஒவ்வொரு நகரத்திலும் '  நகர வெப்ப  தீவு விளைவு'  என்ற நிகழ்ச்சி செயல்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது.  இதனை டிப்பிங் பாயிண்ட் என்று கூறுவார்கள்.  அதிகபட்ச  வெப்பம் தாங்கும் திறன்  என அறியப்படுகிறது.  டெல்லி நகரின் இரவு வெப்பநிலை இயல்பான வெப்பநிலையை விட எட்டு டிகிரி சென்டிகிரேட் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.  மக்கள் வெளிப்படுத்தும் அதிகபட்ச பசுமை குடில் வாயுக்கள் விளைவாக ஏற்படும்  வெப்பத்தில் 90% கடல் நீர் உள்வாங்கிக் கொள்கிறது.  இந்த வெப்ப ஆற்றல் உலகெங்கிலும் ஒரு  ஒரு ஆண்டில் பயன்படுத்தப்படும் மின்னாற்றலைப் போல 140 மடங்கு வெப்ப ஆற்றலாகும்

  இந்த வெப்பத்தின் காரணமாக  பூமியின் வட துருவ பனி மலைகள் உருகுவதால்  பூமியின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் குளிர் நீர் கன்வேயர் பெல்ட் எனப்படும் நீர் சுழற்சி பாதிக்கப்படும்.  இந்த ஆண்டு  ஏற்பட்டுள்ள எல்   நீனோவின் விளைவு மிகத் தீவிரமாக உள்ளதை நாம் கண்டு வருகிறோம். இதன் விளைவாக இரவு நேர வெப்பநிலை அதிகரித்து பெருமளவில் மரணங்கள் ஏற்படும்.  மனிதகுலம் இப்பொழுதேனும் விழித்துக் கொள்ளாவிட்டால் இந்த பூமியை யாராலும் காப்பாற்ற முடியாது என்பன போன்ற பல கருத்துக்களை ஆசிரியர் ராஜு கூறினார்.  முன்னதாக  நெஸ்ட் அறக்கட்டளை  நிர்வாகி ராமதாஸ்  வினாடி வினா நிகழ்ச்சியை நடத்தினார் .  ஆசிரியை மாலா அனைவரையும் வரவேற்றார், இயக்குனர் குமாரவேல் அவர்கள் முன்னிலை வகித்தார், ஆசிரியை திருமதி.   பவியானா  நன்றி கூறினார்.  சுற்றுச்சூழல் வினாடி  வினா நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.  


தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad