உதகை- கீழ் மந்தைனையில் தோட்டக்கலை திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்.
நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் வட்டாரம் தோட்டக்கலை - மலை பயிர்கள் துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் மந்தனை கிராமத்தில் 17.08.2026 அன்று திறன் மேம்பாட்டு பயிற்சி தேயிலை பயிரில் மதிப்பு கூட்டுதல் என்ற தலைப்பில் நடைபெற்றது. இப்பயிற்சிக்கு மந்தனை கிராம ஊர் தலைவர் திரு. ஜோகி அவர்கள் தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார். இப்பயிற்சியில் உதவி வேளாண்மை அலுவலர் திரு. அருண் குமார் அவர்கள் வேளாண்மை மற்றும் வேளாண் சகோதர துறைகள் மூலம் செயல்படுத்தப் படும் மானிய திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரு. பிரசாந்த் அவர்கள் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொழில் நுட்ப பயிற்சிகள் குறித்தும் அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார். முன்னோடி விவசாயி திரு. சின்னப்பன் அவர்கள் கலந்து கொண்டு அங்கக முறையில் தேயிலை சாகுபடி மற்றும் தேயிலை பயிரை மதிப்பு கூட்டி கிரீன் டீ ஒயிட் டீ மற்றும் சில்வர் டிப் டீ தயாரிக்கும் முறைகள் குறித்து விளக்கினார். ஆத்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் திரு. ஜான் போஸ்கோ பிரதீப் அவர்கள் தேயிலை பயிரில் பயன்படுத்தப்படும் அங்கக இடுபொருட்கள் குறித்து எடுத்துரைத்தார். இப்பயிற்சியில் 25 க்கு மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களைச் சார்ந்த பெண் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பட்டனர் இறுதியாக உதவி தொழில்நுட்ப மேலாளர் சற்குணசீலன் நன்றி கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment