ஒய் எம் சி எ மற்றும் உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் நினைவு தினம் வீர வணக்க நாளாக அனுசரிக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பிறகு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் திரு உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நீலகிரி மாவட்ட தன்னார்வலர்கள் கூட்டமைப்பு தலைவர் சக்தி சுரேஸ் ரமணா நேதாஜியின் வீரமிகு வரலாற்றை எடுத்துரைத்தார் அதனை தொடர்ந்து இந்திய தேசிய ராணுவத்தின் முன்னோடி நேதாஜி உருவாக்கிய படை என விளக்கவுரையாற்ற ஜெய்ஹிந்த் என்ற தலைப்பில் கவிஞர் நீலமலை ஜேபி எழுச்சி உரை நிகழ்த்தினார். முன்னதாக ஒய்எம்சி எ செயலர் மேக்ஸ் வில்லியர்ட் ஜெயப்பிரகாஸ் விடுதலை வேள்வி என வரவேற்புரையுடன் நிகழ்வின் சிறப்பை எடுத்துரைத்தார். ஒய்எம்சிஎ பள்ளி முதல்வர் பிரியங்கா அவர்கள் நிகழ்வை தொகுத்து வழங்க ஆசிரியர் ஏஞ்சல் அவர்கள் நன்றி நவில நாட்டுப் பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment