கன்னேரிமுக்கில் கரடியும் சிறுத்தையும் எதிரெதிரே உலா பொதுமக்கள் பீதி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 August 2026

கன்னேரிமுக்கில் கரடியும் சிறுத்தையும் எதிரெதிரே உலா பொதுமக்கள் பீதி

 


கன்னேரிமுக்கில் கரடியும் சிறுத்தையும் எதிரெதிரே உலா பொதுமக்கள் பீதி.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கு  தபால் நிலையம் பேக்கரி மற்றும் குடியிருப்பு பகுதியில் மூர்த்தி அவர்களின் வீட்டில்  அமைக்கப்பட்டுள்ள   சி.சி. டிவியில் பதிவான காட்சியில் சிறுத்தை நிதானமாக நோட்டமிட்டபடி உலாவருகிறது அதனை தொடர்ந்து எதிர்திசையிலிருந்து கரடியும்  சாவகாசமாக உலா வந்து நோட்டமிட்டு செல்லும் காட்சி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. தினந்தோறும் இப்படி நடக்கிறது பல முறை புகாரளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. மனிதர்கள் மாலை நேரத்தில் கூட வெளியே செல்ல அஞ்சும் நிலை உள்ளது.


மனித உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் வனத்துறை போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கன்னேரிமுக்கு சுற்று வட்டார எட்டூர் மக்களின் கோரிக்கையாகும்.


தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad