நீலகிரி மாவட்டம் உதகை அகலார் பகுதியில் அமைந்துள்ள குருகுலம் பள்ளியின் 17-வது விளையாட்டு விழா - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 August 2026

நீலகிரி மாவட்டம் உதகை அகலார் பகுதியில் அமைந்துள்ள குருகுலம் பள்ளியின் 17-வது விளையாட்டு விழா


 நீலகிரி மாவட்டம் உதகை அகலார் பகுதியில் அமைந்துள்ள குருகுலம் பள்ளியின் 17-வது விளையாட்டு விழா EKALAIVA 28.08.2026 வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைப்பெற்றது.


இந்நிகழ்ச்சியில் குருகுலம் பள்ளியின்  நிர்வாக தலைவர் திருமதி.வாசுகி அர்ஜுனன், முதல்வர் திரு.சுரேஷ் பாபு ,துணை முதல்வர் திருமதி.நதியா நைட்டிங்கேல் ,அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திரு.நடராஜன் MA.,BT (குருகுலம் பள்ளியின் முன்னாள் முதல்வர்) அவர்கள் பங்கேற்று இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .


 

பள்ளியின் அணிவகுப்பில் , பள்ளியின் SPL செல்வி.நிலானி , ASPL செல்வி.தக்ஷிதா ,SAMA HOUSE CAPTAIN  செல்வி. திக்ஷயா,VICE CAPTAIN செல்வி பிரணதி , ATHARVA HOUSE CAPTAIN செல்வன் ராகுல் ,VICE CAPTAIN செல்வி ஹாசினி ,RIG HOUSE CAPTAIN செல்வன் பிரஜன் குட்டன்,VICE CAPTAIN  செல்வி ஹனி சுபிக்ஷா,YAZUR HOUSE CAPTAIN செல்வன் யதுநந்தன் ,VICE CAPTAIN செல்வி ஹாசினி  மற்றும் நான்காம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சியானது ATHLETIC TORCH RUN உடன் துவங்கியது. நிகழ்ச்சியில் எல்கேஜி முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றன.  நான்காம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் சிறப்பாக பங்கேற்று பல்வேறு வகையான யோகாசனங்கள், யோகாமுத்திரைகள் செய்து காண்பித்து அசத்தினர். சப் ஜூனியர் மற்றும் சீனியர் DRILL நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பாக மாணவர்கள் தங்கள் தொன்மையான தற்காப்பு  கலையான சிலம்பம் பயிற்சி செய்து காட்டி அசத்தினர் மற்றும் நமது மாணவர்களுக்கு இடையேயான RELAY நடைபெற்றது. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு கராத்தே போட்டிகள் நடைபெற்றது. மாணவர்கள் பல்வேறு வகையான KARATE கலையை செய்து காட்டி அசத்தினர். FIRE JUMP – ல், எறிந்து கொண்டிருக்கிற நெருப்பு வளையத்திற்குள் மாணவர்கள் குதித்து பல வகையான சாகசங்களை செய்து அசத்தி னர். நான்கு ஹவுஸ் மாணவர்களும் பிரமிட் செய்து காட்டி அசத்தினர். மாணவர்களுக்காக நடைபெற்ற போட்டிகளுக்கான பரிசுகளும் பதக்கங்களும் சான்றிதழ்களும் நமது சிறப்பு விருந்தினர் திரு .நடராஜன் ஐயா அவர்கள் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தார். அவர் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான சிறப்புரை ஆற்றியதில் மாணவர்களை மாலை வேளையில் சிறிது நேரமாவது விளையாட விட வேண்டும் என்று பெற்றோர்களை வலியுறுத்தினார்.


மாணவர்கள் தினமும் யோகா முத்திரைகள் ஆகியவற்றை பத்து நிமிடமாவது செய்ய வேண்டும். பள்ளி நாட்கள் மட்டுமல்லாமல் தங்கள் வாழ்நாள் முழுவதும் யோகக் கலையை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூறினார். இறுதியில் ASPL செல்வி தக்ஷிதா நன்றியுரை ஆற்றினார்.  இறுதியில் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி  இனிதே  நிறைவுற்றது.



தமிழக குரல் செய்திகளுக்காக உதகை தாலுகா புகைப்பட கலைஞர் வினோத் குமார்


No comments:

Post a Comment

Post Top Ad