உதகை பிரிக்ஸ் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 21 August 2026

உதகை பிரிக்ஸ் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு

 


உதகை பிரிக்ஸ் பள்ளியில் அறிவியல்  கருத்தரங்கு



 தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக  உதகை பிரிக்ஸ் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சரவண சந்தர் தலைமை தாங்கினார்.  அறிவியல் இயக்கத்தின் மாநில  கருத்தாளர் கே. ஜே. ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியபோது கூறிய கருத்துக்கள்..... 21ஆம்  நூற்றாண்டை நான்காம் தொழிற் புரட்சி என்று கூறுவார்கள்.  இந்த சூழ்நிலையில் மாணவர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள தேவையான திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  பேச்சாற்றல் தலைமை பண்பு முடிவெடுத்தல் மற்றும் படைப்பாற்றல் போன்ற மென் திறன்களையும் பாடத்திட்டங்களை முழுமையாக புரிந்து கொள்ளுதல் கணினி பயன்படுத்தி  தகவல் பெறுதல்  கணிதம் மற்றும்  புள்ளியில்  தகவல்களை கையாளும் திறன் போன்ற  வன்திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.  இதற்கு பயிற்சி விடாமுயற்சி ஆகியவை மிக முக்கியம்.  இந்திய விஞ்ஞானிகள்  மற்றும் சாதனையாளர்களை பற்றி அறிந்து கொள்ளுதல் மிக முக்கியம்.  இந்திய விஞ்ஞானி என்றாலே நம் நினைவில் வருவது அப்துல் கலாம் மட்டுமே.  தமிழ்நாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சர் சி வி ராமன் சந்திரசேகரன் மற்றும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆகிய மூன்று விஞ்ஞானிகள் நோபல் பரிசு பெற்று  சாதனை படைத்துள்ளனர்.  ஆர் கோபிந்சிங்  என்ற இந்திய விஞ்ஞானி மரபணு ஆய்விற்காக நோபல் பரிசு பெற்றுள்ளார்.  ஜானகி அம்மாள் என்ற விஞ்ஞானி கரும்பு மற்றும் ஆராய்ச்சி துறையில் சாதனை படைத்ததால் தான் இன்று கரும்பு விவசாயம் செழித்து வளர்ந்துள்ளது.  இஸ்ரோவின் சந்திரயான் மங்கள்யான் போன்ற திட்டங்களின் வெற்றியில் திரை மறைவில் இருந்து செயல்பட்ட பெண் விஞ்ஞானிகளை பற்றி  நாம் அறிந்து கொள்ளவில்லை.  உதகை அருகில் உள்ள ரேடியோ அஸ்ட்ரானமி சென்டர் விஞ்ஞானிகள் 1970 லேயே இந்தப் பிரபஞ்சம் தோன்றிய பிக்பேங்க் எனப்படும் பெரு வெடிப்பு கொள்கையை நிரூபித்துள்ளனர்.  இந்தியா முழுவதிலும் உள்ள 263   ஆய்வு நிலையங்களை நிர்வகிக்கும் தலைமை பொறுப்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி திருமதி. கமலா ஆகும்.  நமது பிரபஞ்சம் ஒரு பலூன் போன்றது.  இது போன்ற கோடிக்கணக்கான பலூன்கள் உள்ளன.  இரண்டு பலூன்கள் ஒன்றோடு ஒன்று  மோதிக்கொள்ளும் போதோ  அல்லது ஒரு பலூன் இரண்டாகப் பிரியும் போது புதிய பிரபஞ்சம் உருவாகும் என நவீன அறிவியல் கண்டறிந்துள்ளது .  அங்கு வேறு விதமான இயற்பியல் விதிகள் இருக்கலாம் என்ன விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.  என்பன  போன்ற பல அறிவியல் செய்திகளை ஆசிரியர் ராஜு அவர்கள் கூறினார்.


தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad