B மணியட்டியில் தோட்டக்கலை அட்மா இரண்டாம் நிலை வேளாண்மை பயிற்சி. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 21 August 2026

B மணியட்டியில் தோட்டக்கலை அட்மா இரண்டாம் நிலை வேளாண்மை பயிற்சி.

 


B மணியட்டியில் தோட்டக்கலை அட்மா இரண்டாம் நிலை வேளாண்மை பயிற்சி.



நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் வட்டாரம் தோட்டக்கலை - மலை பயிர்கள் துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் பி மணிஹட்டி கிராமத்தில் 20.08.2026 அன்று உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி இரண்டாம் நிலை வேளாண்மை (Secondary Agriculture) என்ற தலைப்பில் நடைபெற்றது. இப்பயிற்சிக்கு பி. மணிஹட்டி கிராம ஊர் தலைவர் திரு. அசோகன் அவர்கள் தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார். இப்பயிற்சியில் உதவி வேளாண்மை அலுவலர் திரு. அருண் குமார் அவர்கள் கலந்து கொண்டு வேளாண்மை மற்றும் வேளாண் சகோதர துறைகளான தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப் படும் மானிய திட்டங்கள்  குறித்து விரிவாக எடுத்துரைத்தார் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரு. பிரசாந்த் அவர்கள் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொழில் நுட்ப பயிற்சிகள் குறித்தும் காய்கறி பயிர்களில் மதிப்பு கூட்டுதலின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார். முன்னோடி விவசாயி திரு. நெல்சன் அவர்கள் கலந்து கொண்டு கேரட் பயிரில் மதிப்பு கூட்டுதல் மூலம் கேரட் கேண்டி (Carrot Candy) மற்றும் கேரட் மொரப்போ (Carrot Moroppo) தயாரிப்பு குறித்து செயல் முறை விளக்கம் அளித்தார். மேலும் தேயிலை பயிரை மதிப்பு கூட்டி கிரீன் டீ தைம் டீ மற்றும் சில்வர் டிப் டீ தயாரிக்கும் முறைகள் குறித்தும் வெள்ளை பூண்டு மூலம் ஊறுகாய் தயாரிப்பு குறித்தும் விளக்கினார்.முன்னதாக அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் திரு. ஜான் போஸ்கோ பிரதீப் அவர்கள் விவசாயிகள் அனைவரையும் வரவேற்றார் இப்பயிற்சியில் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர் இறுதியாக உதவி தொழில்நுட்ப மேலாளர்  திரு. சற்குணசீலன் அவர்கள் நன்றி கூறினார்.


தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:

Post a Comment

Post Top Ad