தீட்டுக்கல் பகுதியில் 80 வந்து சுதந்திர தின விழா கொண்டாட்டம்
80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, உதகை, தீட்டுக்கல் பகுதியில் அமைந்துள்ள நீலகிரி மாவட்ட தலைமை விடியல் மற்பணி மன்றம் சார்பில் சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் பி. சீனிவாசன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து விழாவைத் தொடங்கி வைத்தார். மன்றத்தின் தலைவர் திரு. சதீஷ்குமார் (TNSTC) அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அமைப்புசாரா கட்டிடத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த திரு. மயில்சாமி மற்றும் மை பாரத் ஒருங்கிணைப்பாளர் திரு. ரஞ்சித்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும், முன்னாள் ராணுவ வீரர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மன்றத்தின் துணைத்தலைவர் திரு. ராஜா, செயலாளர் திரு. வினோத், பொருளாளர் திரு. லக்ஷ்மணன், பொருளாளர் திரு. பிரகாஷ், ஆலோசகர் திரு. ஆனந்தன் மற்றும் பொறுப்பாளர்களான மூர்த்தி, கார்த்திக், வினுகோபால், விக்னேஷ், ஜானி, சி. விக்னேஷ், ரிஷப், ஃபிராங்க்ளின், D.R.P. ரவி பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் சிறப்பாக விளையாடிய மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் சார்பில் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், இளைஞர்களிடையே நாட்டுப்பற்று மற்றும் சமூக ஒற்றுமையை வளர்க்கும் வகையிலும் நடைபெற்றது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment