என்.எஸ்.எஸ். சார்பில் தேசிய விளையாட்டு தின நிகழ்ச்சி உதகை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 28 August 2026

என்.எஸ்.எஸ். சார்பில் தேசிய விளையாட்டு தின நிகழ்ச்சி உதகை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது


என்.எஸ்.எஸ். சார்பில் தேசிய விளையாட்டு தின நிகழ்ச்சி உதகை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது

உதகமண்டலம், ஆகஸ்ட் 27:


இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் இளைஞர் நலத் துறையின் கீழ் செயல்படும் மை பாரத் (MY Bharat) சார்பில், ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாடப்படும் தேசிய விளையாட்டு தினத்தை ஒட்டி, “கேலோ இந்தியா சம்வாத் – பிஎம் கி பாத் பிஎம் கே சாத்” நிகழ்ச்சி இன்று (27.08.2026) உதகமண்டலம் அரசு கலைக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் திரு. எபினேசர் அவர்கள் தலைமை தாங்கி மாணவர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவம் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு குறித்து உரையாற்றினார். நிகழ்வில் என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் (Programme Officer) திரு. ஜெயராமன் மற்றும் என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் திரு. அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நிகழ்ச்சியில் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களின் காணொலி உரை ஒளிபரப்பப்பட்டது. தொடர்ந்து இந்தியாவின் விளையாட்டு வளர்ச்சி, இளைஞர்களுக்கான விளையாட்டு வாய்ப்புகள், உடற்தகுதி, தலைமைத்துவ திறன், தன்னார்வப் பணி மற்றும் “வளர்ந்த இந்தியா @2047” என்ற இலக்கை அடைவதில் விளையாட்டின் பங்கு குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றன.


சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மை பாரத் –  பொறுப்பாளர் திரு. ரஞ்சித் குமார் அவர்கள் மாணவர்களிடையே விளையாட்டு உணர்வு, சமூகப் பொறுப்பு மற்றும் இளைஞர்களின் தலைமைத்துவ திறன்களை வளர்த்துக் கொள்வதன் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார். மேலும், நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானது என்பதை வலியுறுத்தினார்.


இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் திரு. ஜெயராமன் மற்றும் என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் திரு. அசோக் ஆகியோர் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்து நடத்தினர்.


இறுதியாக தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. மேலும், விளையாட்டு, உடற்தகுதி மற்றும் தேசிய வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.


இந்த நிகழ்ச்சி மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வத்தையும் தேசிய முன்னேற்றத்திற்கான பொறுப்புணர்வையும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

No comments:

Post a Comment

Post Top Ad