நஞ்சநாடு மேல்நிலைப்பள்ளியில் NCC மாணவர்கள் சாலை விழிப்புணர்வு.
நீலகிரி மாவட்டம் நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 31 தமிழ்நாடு NCC அமைப்பு மற்றும் உதகை ஆனைமலை டொயோட்டா கம்பெனிகள் இணைந்து மாணவர்களுக்கு சாலை விழிப்புணர்வு நடைபெற்றது.
நஞ்சநாடு மேல்நிலைப்பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் செந்தில் குமார் தலைமை தாங்கினார். NCC முதன்மை அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
மாணவர்களிடத்தில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக தலை கவசம் அணியவேண்டும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் சாலையில் வலதுபுறம் நடந்து செல்லவேண்டும் சீட் பெல்ட் அணிவதின் அவசியம் ஆகியன எடுத்து கூறப்பட்டது.
விழாவில் உதகை ஆனைமலை டொயோட்டா கம்பெனி மேலாளர் வினோத் ஊழியர்கள் சபரிஷ், கவின் மற்றும் ஆசிரியர்கள் சரவணன், சசி, சக்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment