தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் மாணவ விஞ்ஞானிகளை கண்டறிவோம்-கருத்தரங்கு-
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் என்ற ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கும் போட்டி அகில இந்திய அளவில் நடைபெறுகிறது. நீலகிரி மாவட்ட அளவிலான வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் மற்றும் இளம் மாணவ விஞ்ஞானிகளை கண்டறிவோம் என்ற தலைப்பில் பயிலரங்கமும் உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உதகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருள் அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் நோக்கம் குறித்து பேசிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே ஜே ராஜு அவர்கள் பேசும்போது பெரும்பாலான இந்திய விஞ்ஞானிகள் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படித்தவர்கள் தான். இந்தியாவில் உள்ள 263 அறிவியல் ஆய்வு மையங்களில் விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரிய அளவில் பற்றாக்குறை உள்ளது. பள்ளியில் படிக்கும் போதே மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து விஞ்ஞானிகளை உருவாக்கலாம் என்று கூறினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உதகை வானொலி வானியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர் விஞ்ஞானி முனைவர் கிருஷ்ணகுமார் அவர்கள் பேசும்போது இந்த பிரபஞ்சத்தின் கோடிக்கணக்கான நட்சத்திரங்களும் கேலக்ஸிகளும் உள்ளன. இவற்றை விஞ்ஞானிகளால் மட்டுமே ஆய்வு செய்ய முடியாது. மாணவர்களும் வானியலில் ஆர்வம் உள்ள பொதுமக்களும் ஆய்வு செய்து புதிய கண்டுபிடிப்புகளை கண்டறியலாம் என்று கூறினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு முகமது பாதுஷா அவர்கள் 42 ஆண்டு கால அறிவியல் இயக்கத்தின் சாதனைகளை பட்டியலிட்டுக் கூறினார். நாசா மக்கள் விஞ்ஞானி பேராசிரியர் ஜனார்த்தனன் அவர்கள் மாணவர்கள் எவ்வாறு சுற்றுச்சூழலை ஆய்வு செய்து நாசாவிற்கு தகவல் அனுப்பலாம் என்பது குறித்து விரிவாக பேசினார். சமூக செயல்பாட்டாளர் வள்ளி ரமேஷ் அவர்கள் அறிவியலும் சமுதாயமும் என்ற தலைப்பில் பேசினார். உபதலை சாய் நிவாஸ் சேவா அறக்கட்டளை நிர்வாகி சுப்ரமணியம் வாழ்த்துரை கூறினார். பின்னர் நடைபெற்ற நிறைவு விழாவிற்கு குன்னூர் அமிர்தராஜ் அறக்கட்டளையின் தாளாளர் திரு அமிர்தராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நுண்ணறிவு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துரை கூறினார். கூடலூர் அருகில் உள்ள புளியம்பாறை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்து நம்மை எச்சரிக்க கூடிய நவீன கருவியை கண்டுபிடித்துள்ளனர் அந்த கண்டுபிடிப்பிற்கு காப்புரிமை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவர்களை பாராட்டி சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சியை அறிவியல இயக்கத்தின் மாநில கருத்தாளர் ரிஷி சரவணன் அவர்கள் அளித்தார் முன்னதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நீலகிரி மாவட்ட தலைவர் தலைமையாசிரியர் சங்கர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். கே.ஜே . ராஜு அவர்கள் நன்றி கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment