குன்னூரில் எம் எஸ் எம் இ துறை அமைச்சரை நேரில் சந்தித்த டி வ கே மேற்கு மாவட்ட செயலாளர் சரவணன்
நீலகிரி மேற்கு மாவட்ட செயலாளர் திரு. சி. சரவணன் அவர்கள், குன்னூரில் MSME துறை அமைச்சர் திரு. பி. மதன் ராஜா அவர்களை நேரில் சந்தித்தார்.
அப்போது, நீலகிரி மேற்கு மாவட்ட தொகுதியில் நிலவும் பல்வேறு மக்கள் நலப் பிரச்சினைகள், அடிப்படை வசதி தேவைகள் மற்றும் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து, அவற்றுக்கு விரைந்து தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தார்.
மக்களின் நலனையும், தொகுதியின் வளர்ச்சியையும் முன்னிறுத்தி தொடர்ந்து செயல்பட்டு வரும் நீலகிரி மேற்கு மாவட்ட செயலாளர் திரு. சி. சரவணன் அவர்களின் இந்த சந்திப்பு, பொதுமக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய முயற்சியாக அமைந்தது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment