தேவாலாவில் இலவச கண் சிகிச்சை முகாம்: 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 20 July 2026

தேவாலாவில் இலவச கண் சிகிச்சை முகாம்: 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு


தேவாலாவில் இலவச கண் சிகிச்சை முகாம்: 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பந்தலூர், ஜூலை 21: தேவாலா குளோபல் பள்ளியில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண் பரிசோதனை செய்து கொண்டனர்.


நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், தேவாலா நகர அரசு நகர ஆரம்ப சுகாதார நிலையம், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் ஆல் தி சில்ரன் ஆகியவை இணைந்து முகாமை நடத்தின.


உதகை அரசு மருத்துவ கல்லூரி கண் மருத்துவக் குழுவினர் கண்புரை, கண் அழுத்த நோய், விழித்திரை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு கண் நோய்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 25 பேருக்கு கண்புரையும், 5 பேருக்கு கண் சதை வளர்ச்சியும் கண்டறியப்பட்டு மேல்சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். மேலும், 70-க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் கண்ணாடி வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.


முகாமில் ஆஷா பணியாளர்கள் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை பரிசோதனைகளையும் மேற்கொண்டனர். தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த முகாமால் தேவாலா மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு பயன் கிடைத்தது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:

Post a Comment

Post Top Ad