தேவாலா அட்டி பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
பந்தலூர் அருகே உள்ள தேவாலா அட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் சார்பில் மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) ராஜலட்சுமி வகித்தார்.
நிகழ்ச்சியில், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசுகையில், நீர், நிலம், காற்று ஆகாயம், நெருப்பு எனும் ஐம்பூதங்கள் ஆகிய இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டியதையும் வலியுறுத்தினார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், மாணவர்கள் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து இயற்கையை நேசிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் தரிசணதேவி, சாந்தி, தமிழ்ச்செல்வன், சித்ராதேவி மாணவர்கள், நுகர்வோர் மைய ஒருங்கிணைப்பாளர் மகேந்திர பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment