உதகை மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பான நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முருகன் தலைமை தாங்கினார் அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகளான கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன், குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் ஆல்துரை, கோத்தகிரி புழுமௌண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் வாசுதேவன், செயலாளர் முகமது சலீம், உதகை நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் அமீர்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசும்போது சாலை ஓரங்களில் வளர்ந்துள்ள ஆபத்தான மரங்கள், செடி கொடிகள் வெட்டி அகற்றவும் நாடுகானி - தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர தடுப்பு சுவர்கள் அமைக்கவும், பந்தலூர் - முக்கட்டி சாலை மற்றும் இலியாஸ் கடை - கொளப்பள்ளி சாலை அகலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோத்தகிரி மழைநீர் செல்ல அமைக்கப்பட்டுள்ள கால்வாய்கள் தூர்வார வேண்டும், நிழற்குடை அமைக்க இடம் ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும். குன்னூர் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை சார்ந்த பகுதியில் அகலப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடலூர் - உதகை நெடுஞ்சாலைத் துறை சார்பான சாலைகள் அகலப்படுத்தவும், வளர்ந்துள்ள முடிச்செடிகளை அகற்றந டவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் பேசப்பட்டன. நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முருகன் பதில் அளித்து பேசும்போது சாலைகள் அருகே உள்ள ஆபத்தான மரங்கள் வெட்டுவதற்கு வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் இணைந்து வெட்டிதர நடவடிக்கை எடுக்கப்படும். சாலைகள் அகலப்படுத்துவதில் அதிகபட்ச போக்குவரத்து உள்ள சாலைகள் தேர்வு செய்யப்படுவதால் அதற்கான வாகன போக்குவரத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலிகமாக சாலைகள் சிமெண்ட் கான்கிரீட் மூலம் அகலப்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும். தேவையான இடங்களை ஆய்வு செய்து தடுப்பு சுவர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மழைநீர் செல்லும் கால்வாயில் அடைப்புகள் தூர்வார ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உதவி கோட்ட பொறியாளர்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment