பந்தலூர் நூலகத்தில் இலவச மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம்
பந்தலூர் முழுநேர கிளை நூலகத்தில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், இந்திய செஞ்சிலுவை சங்க நடமாடும் மருத்துவக் குழு, பந்தலூர் முழுநேர கிளை நூலகம், அம்பேத்கர் மக்கள் இயக்கம் மற்றும் மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியவை இணைந்து நடத்திய முகாமிற்கு பந்தலூர் கிளை நூலகர் நித்தியகல்யாணி தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், செஞ்சிலுவை சங்க கல்லூரி ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஸ்டீவன்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செஞ்சிலுவை சங்க மாவட்ட செயலாளர் மோரிஸ் சாந்தகுருஷ் முகாமை தொடங்கி வைத்தார். மருத்துவர் ஜேன் மார்டினெஸ் தலைமையிலான மருத்துவக் குழுவில் மருந்தாளுநர் நவீன், செவிலியர் கிரிஜா, நிர்வாக அலுவலர் லாய்சன் உள்ளிட்டோர் பங்கேற்று ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை பரிசோதனை மற்றும் பொது மருத்துவ சிகிச்சைகளை வழங்கினர். தேவையானவர்களுக்கு இலவச மருந்துகளும் வழங்கப்பட்டன.
அதேபோல் கண் மருத்துவர் பிரவின், கண் தொழில்நுட்ப உதவியாளர்கள் ராபர்ட் மற்றும் பாக்யா ஆகியோர் கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் பிற கண் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
முகாமில் 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவ பரிசோதனை பெற்றனர். 15 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கும், 10 பேர் கண் அழுத்தம் (Glaucoma) சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். 85 பேருக்கு கிட்ட பார்வைக்கான இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன, இலவச மருந்துகள் வழங்கப்பட்டன. முகாமிற்கான ஏற்பாடுகளை அம்பேத்கர் மக்கள் இயக்க நிர்வாகிகள் இந்திரஜித், முருகவேல், மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌஸாத், நூலக உதவியாளர் சரஸ்வதி, போட்டித்தேர்வு மாணவர்கள் மற்றும் பலர் சிறப்பாக செய்திருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment