கன்னேரிமுக்கில் கண் மருத்துவ முகாம்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கு ஹிம்பரதோட்ட சமுதாய கூடத்தில் நீலகிரி ரோட்டரி மற்றும் நீலகிரி இந்தியன் ரெட் கிராஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து இலவச கண் மருத்துவ முகாம், இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் இலவச கண் கண்ணாடிகள் வழங்கும் முகாம் 16.6.2026 செவ்வாய் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற்றது. கன்னேரிமுக்கு ஊர் தலைவர் திரு. ராமா கவுடர் அவர்கள் முகாமை தொடங்கி வைத்தார்.கன்னேரிமுக்கு சுற்றுவட்டார எட்டூர் மக்கள் கலந்து கொண்டு நூற்றுக்கும் மேலான பயணாளிகள் பயனடைந்தனர். இலவச மருந்து மாத்திரைகளும் இலவச கண் கண்ணாடிகளும் வழங்கப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.




No comments:
Post a Comment