குன்னூர் வஜ்ரம் விளையாட்டு வளர்ச்சி கூட்டமைப்பு கராத்தே பெல்ட் தேர்வு
கராத்தே பெல்ட் தேர்வு ஜூன் 28 குன்னூர் பகுதியில் நேற்று சிறப்பாக நடைபெற்றது வஜ்ரம் விளையாட்டு வளர்ச்சி கூட்டமைப்பு மற்றும் Maunto Shito-Ryu Karate Academy சார்பில் கராத்தே பெல்ட் தேர்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி வஜ்ரம் விளையாட்டு வளர்ச்சி கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் வளரி ஆசான் காமராஜ் மற்றும் சங்கர் அவர்களின் ஆசியுடன் நடைபெற்றது. தேர்வை 6th Dan Black Belt சென்செய் கருணாகரன் தலைமையில் தாங்கினார் வஜ்ரம் விளையாட்டு வளர்ச்சி கூட்டமைப்பின் நீலகிரி மாவட்ட கராத்தே பயிற்சியாளர் உமாசங்கர் மற்றும் சென்செய் கருணாகரன் ஆகியோர் நடுவர்களாகப் பொறுப்பேற்று மாணவர்களின் திறமைகளை மதிப்பீடு செய்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வஜ்ரம் விளையாட்டு வளர்ச்சி கூட்டமைப்பின் நீலகிரி மாவட்ட தலைவர் திரு. உ. நெடுமாறன், (முன்னாள் ராணுவ வீரர் திரு. உதயகுமார்) திரு. சாம்காலேப் மற்றும் சிலம்பம் பயிற்சியாளர் திரு. கி. இளவரசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி வாழ்த்தினர்.
மேலும், திரு. உ. நெடுமாறன் மற்றும் (திரு.உதயகுமார் முன்னாள் ராணுவ வீரர்) மற்றும் சாம் காலேப் அவர்கள் கராத்தே பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் அனைவருக்கும் நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுதுகோல் மாணவர்களை ஊக்கப்படுத்தி வழங்கப்பட்டது
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு வஜ்ரம் விளையாட்டு வளர்ச்சி கூட்டமைப்பு மற்றும் Maunto Shito-Ryu Karate Academy சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட ஒளிப்பதிவாளர் தீன தயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:
Post a Comment