கூடலூரில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்வு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 29 June 2026

கூடலூரில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்வு


கூடலூரில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்வு 

கூடலூர் நகர சுகாதார நிலையத்தில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


ஆல் தி சில்ரன் அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் தலைமை தாங்கினார்.


கூடலூர் காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் விஜயகுமார், அரசு வட்டார சுகாதார நிலைய பாலியட்டிவ் பிரிவு செவிலியர் நிஷாந்தினி, செவிலியர் மேற்பார்வையாளர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூடலூர் நகர சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கௌதம் மற்றும் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து  பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி பேசும்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு நோயை எதிர்கொள்ளும் உறுதியுடன், ஊட்டச்சத்தும் அவசியம்.  ஆரோக்கியமாக வாழ தற்போது வழங்கிய பயறு, கொண்டைக்கடலை, சிகப்பு அவல், உலர் திராட்சை, பழங்கள் உள்ளிட்ட ஊட்டசத்து உணவுகள் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்றனர்.


இந்நிகழ்ச்சியில் கூடலூர், ஓவேலி, ஸ்ரீமதுரை உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் சேவைப் பகுதிகளைச் சேர்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 30 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன.


நிகழ்ச்சியில் பயனாளர்கள், செவிலியர்கள், ஆஷா (ASHA) பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு..

No comments:

Post a Comment

Post Top Ad