காந்தள் கஸ்தூரிபாய் காலனியில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
மேரா யுவ பாரத், நீலகிரி மாவட்ட தலைமை விடியல் நற்பணி மன்றம், நீலகிரி இளைஞர் பாசறை சார்பில், லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பாக காந்தள் கஸ்தூரிபாய் காலனி மக்களுக்கு மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட தலைமை விடியல் நற்பணி மன்றம் தலைவர் சதிஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இளைஞர் பாசறை தலைவர் மதிவாணன், செயலாளர்
தமிழ்ச்செம்மல் புலவர் இர.நாகராஜ், தீட்டுக்கல் உதயகுமார் ,லோட்டஸ் கண்மருத்துவமனை தகவல் தொடர்பாளர் சந்திரபாபு, ஆப்டம் நவீன், பழனி ஆகியோர் கலந்துக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு உரை நிகழ்த்தினர் .விடியல் நற்பணி மன்றம் நிர்வாகிகள் பலரும் கலந்துக் கொண்டு மருத்துவ விழிப்புணர்வு முகாமை வழி நடத்தினர். இந்நிகழ்வில் பொதுமக்கள் பலரும் கலந்துக் கொண்டு கண்பரிசோதனை செய்து பயன்பெற்றனர். செயலாளர் வினோத் நன்றி கூறினார்.


No comments:
Post a Comment