போதைப்பொருளுக்கு எதிராக 22 கி.மீ மாரத்தான் ஓட்டம்: கல்லூரி மாணவி தேவி பிரியாவிற்கு குவியும் பாராட்டு! - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 June 2026

போதைப்பொருளுக்கு எதிராக 22 கி.மீ மாரத்தான் ஓட்டம்: கல்லூரி மாணவி தேவி பிரியாவிற்கு குவியும் பாராட்டு!

 


போதைப்பொருளுக்கு எதிராக 22 கி.மீ மாரத்தான் ஓட்டம்: கல்லூரி மாணவி தேவி பிரியாவிற்கு குவியும் பாராட்டு!


நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் சார்பில், போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் பிரம்மாண்ட விழிப்புணர்வு தனிநபர் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

இவ்விழிப்புணர்வு ஓட்டம் கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்து தொடங்கியது. கூடலூர் பகுதியின் பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு இந்த மாரத்தான் ஓட்டத்தைத் துவக்கி வைத்தனர்.

இரண்டரை மணி நேரத்தில் சாதனை: இந்த விழிப்புணர்வு நிகழ்வில், கூடலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேவி பிரியா ஒற்றைப் பெண்ணாகப் பங்கேற்று மாரத்தான் ஓட்டத்தை மேற்கொண்டார். கூடலூரில் இருந்து பந்தலூர் வரை உள்ள 22 கிலோமீட்டர் தொலைவினை, அவர் வெறும் இரண்டரை மணி நேரத்தில் ஓடிக் கடந்து சாதனை படைத்துள்ளார். வழிநெடுகிலும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் திரண்டு வந்து அவருக்கு மலர் தூவியும், வாழ்த்துக் கோஷங்களை எழுப்பியும் உற்சாகமான வரவேற்பளித்துப் பாராட்டினர்.

மாணவியின் விழிப்புணர்வுச் செய்தி: மாரத்தான் ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மாணவி தேவி பிரியா,

"தமிழகம் போதைப்பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற வேண்டும். இன்றைய இளைய தலைமுறையினர் தங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தையும், இதர நேரங்களையும் தேவையற்ற பழக்க வழக்கங்களில் வீணடிக்காமல், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி போன்ற பயனுள்ள வழிகளில் மாற்றிக்கொள்ள வேண்டும்" என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்விற்காகத் தனிநபராக ஓடி சாதித்த இந்தக் கல்லூரி மாணவியின் முயற்சிக்கு ஒரு துணையாக இருந்த நீலகிரி மாவட்ட சமூகத் தன்னார்வள் கூட்டமைப்பையும் நீலகிரி மாவட்ட மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட ஒளிப்பதிவாளர் தீன தயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad