நீலகிரி மாவட்டம் சுகாதார துறை சார்பில் நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடைபெற்றது. மருத்துவம் மற்றும் நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு நீலகிரி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர் நித்தியானந்தம் முன்னிலை வகித்தார் அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்புகள் சார்பில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம், நிர்வாகி மகேந்திர பூபதி, கோத்தகிரி புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் வாசுதேவன், செயலாளர் முகமது சலீம், pro முகமது இஸ்மாயில், உதகை நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் அமீர்கான், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன், செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசும்போது. கூடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உடனிருப்போர் திறந்தவெளியில் தூங்கும் அவலநிலை போக்க தனி அறை ஒதுக்கவேண்டும். கண் மருத்துவர் வாரத்தில் ஒருநாள் கண் பரிசோதனை மட்டும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநோயாளிகள் பார்க்க கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கவும், மருத்துவமனை குறித்த குறைபாடுகள் மீண்டும் சமூக ஊடகங்களில் பரவாத வகையில் சிறந்த முறையில் மருத்துவ சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு ஒதுக்கிய 5 கோடி நிதி ரத்து செய்யப்பட்டுள்ளது மீண்டும் அதே கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடலூர் பந்தலூர் மருத்துவமனைகளில் x ray வசதிகள் ஏற்படுத்த வேண்டும். கோத்தகிரி அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவில் மருத்துவர்களை அதிகப்படுத்த வேண்டும், பெண்களுக்கு பெண் மருத்துவர் வெளிநோயாளி பிரிவில் தனியாக இருக்க வேண்டும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை 2 நிமிடமாவது சோதித்து நோய்தன்மை அறிந்து மருந்து தர வேண்டும், ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவுகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை சோதனை அளவுகளில் வித்தியாசம் உள்ளதா என்பதை ஆய்வு செய்யவேண்டும், தூய்மை பணி முறையாக மேற்கொள்ள வேண்டும். மருந்து மாத்திரைகள் வழங்கும் கவரில் காலை, மதியம், மாலை, இரவு போன்ற குறிப்புகளுடன் வழங்கவேண்டும் மேலும் சித்தா பிரிவு செல்லும் பகுதி சாலை மிகவும் பழுதடைந்து உள்ளதை சரி செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நுகர்வோர் அமைப்புகளின் சார்பில் முன்வைக்கப்பட்டது இதற்கு மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் ராஜசேகரன் கூறுகையில் கூடலூர் அரசு மருத்துவமனையில் சுழற்சி முறையில் கூடுதல் மருத்துவர்கள் இருக்க அறிவுறுத்துபட்டுள்ளது. வாரம் ஒரு நாள் கண் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கபடும். பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு 1.5 கோடி நிதி கோரப்பட்டுள்ளது. X-ray டெக்னீசியன் அரசு மூலம் விரைவில் நியமனம் செய்யப்படும். கோத்தகிரி அரசு மருத்துவமனை மருத்துவ சேவையில் மாநிலத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது, மருத்துவர்கள் 11 பேர் பணியில் உள்ளனர். வெளிநோயாளிகள் பிரிவில் கூடுதல் மருத்துவர் இருக்க நடவடிக்கை எடுக்கபடும். தூய்மை பணிக்கு தனியார் நிறுவனத்தின் மூலம் ஒரு நாளைக்கு எட்டு தடவை தூய்மை பணி செய்யப்படுகிறது, ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் உள்ள கருவிகள் முறையாக அரசு வழிகாட்டுதல் படி வருடத்திற்கு இரண்டு முறை சோதனை செய்யப்படுகிறது. எனவே துல்லியமான அளவுகளில் உள்ளது. மாவட்ட இணை இயக்குநர் அவர்கள் தலைமையில் மாதம் ஒருமுறை தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளை கொண்டு கூட்டம் நடத்தி மருத்துவ சேவை மேம்படுத்தலாம், மருந்து மாத்திரைகள் இனி கவரில் முறையான தகவல்களுடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள் சிவக்குமார் கோத்தகிரி, பந்தலூர் நாசிருதீன், குன்னூர் பிரியதர்ஷினி, மஞ்சூர் கிருஷ்ணராஜ், என் எச் எம் மருத்துவ அலுவலர் பிரசன்னா, அலுவலக சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, அலுவலக உதவியாளர் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment