நீலகிரி மாணவிகளின் உலக சாதனை: சர்வதேச சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து பெருமை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 18 June 2026

நீலகிரி மாணவிகளின் உலக சாதனை: சர்வதேச சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து பெருமை


 நீலகிரி மாணவிகளின் உலக சாதனை: சர்வதேச சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து பெருமை!


நீலகிரி மாவட்டம் பந்தலூர் புனித பிரான்சிஸ் சேவியர் கான்வென்ட் பள்ளி மாணவிகள் இருவர் உலக சாதனை படைத்து, சர்வதேச சாதனை புத்தகத்தில் (International Book of Records) இடம்பிடித்து மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.


அப்பள்ளியைச் சேர்ந்த மாணவி நிஷானி, திருக்குறள் ஒப்புவித்தல் பிரிவிலும், மற்றொரு மாணவியான ஏ. ஜனனி, ஏ4 அளவு காகிதத்தில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் உருவப்படத்தைத் தலைகீழாகப் பென்சிலால் வரைந்தும் இந்த அசாத்திய உலக சாதனைகளைப் புரிந்துள்ளனர். இவர்களில் 13 வயதான மாணவி ஜனனி, தனது அசாத்திய திறமையால் மிகக் குறைந்த வயதிலேயே இச்சாதனையை நிகழ்த்தி சர்வதேச சான்றிதழைப் பெற்றுள்ளார்.


மாணவிகளின் இந்த வரலாற்றுச் சாதனையைப் பாராட்டி பள்ளியில் சிறப்புப் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், மாணவிகளின் பயிற்சியாளர் கிருஷ்ணகுமார், கூடலூர் அரசு கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் திரு. மகேஷ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பொன் ஜெயசீலன், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலரும் கலந்துகொண்டு, சாதனை படைத்த மாணவிகளுக்கு வாழ்த்துகளையும் சர்வதேச சாதனைப் புத்தக நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினர். உலக அரங்கில் முத்திரை பதித்த பந்தலூர் மாணவிகளுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad