தேவாலா நகர சுகாதார நிலையத்தில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 8 June 2026

தேவாலா நகர சுகாதார நிலையத்தில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்


தேவாலா நகர சுகாதார நிலையத்தில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் ஆல் தி சில்ரன் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. 


தேவாலா நகர சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் தலைமை தாங்கினார் 


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பாண்டியன், பிரவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி பேசும்போது தொற்றா நோய்கள் தான் அதிக உயிரிழப்பு ஏற்படுகின்றன. அதில் புற்றுநோயும் ஒன்று. உணவு பழக்கம் முதல் நம்மில் உள்ள புகையிலை உள்ளிட்ட போதை பயன்பாடு போன்றவையும் புற்றுநோய் ஏற்படுத்தும் எனவே இவற்றை தவிர்க்க வேண்டும். புற்றுநோய் குறித்து பரிசோதனை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாய்புற்று , பெண்களுக்கான புற்றுநோய் பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் ஆரம்பகட்டத்தில் கண்டறிந்தால் சிகிச்சைகள் மூலம் குணப்படுத்தி கொள்ளலாம். புற்றுநோயாளிகள் ஊட்டசத்து உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம் என்றார். முதற்கட்டமாக 25 பேருக்கான ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டது. தொடர்ந்து தேவாலா,  நெல்லியாளம், அய்யங்கொல்லி, அம்பலமூலா, கப்பலா, கொளப்பள்ளி உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை சேர்ந்த புற்றுநோய் பயனாளிகளுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டது. 


நிகழ்ச்சியில் பலியட்டிவ் பிரிவு செவிலியர் நிஷாந்தினி மற்றும் செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad