நீலகிரியில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 7 June 2026

நீலகிரியில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி


நீலகிரியில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி 


மேராயுவ பாரத் சார்பாக சைக்கிள் தினத்தை முன்னிட்டு சைக்கிள்  விழிப்புணர்வு பேரணி  நீலகிரி எச்.ஏ.டி.பி  வளாகத்தில் தொடங்கி  சேரிங்கிராஸ் வழியாக ஏ.டி.சி திடல் வரை நடைபெற்றது. சைக்கிள்  விழிப்புணர்வு பேரணியை மேராயுவபாரத் துணை இயக்குநர் விவேக் மற்றும் கெனல் டிரஸ்ட் நிறுவனர் ஜான்பால் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நீலகிரி  கல்வி அறக்கட்டளை தலைவர் ஜாபர் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பியூசர் இந்தியா ஸ்போர்ட்ஸ் அண்ட் கல்சுரல் டெவலப்மென்ட் பவுண்டேசன் தலைவர் மதிவாணன், நீலகிரி சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பு  தலைவர் ரமணா சுரேஷ், குளோபல் டச் இவென்ட்  மேனேஜ்மென்ட் பாலசந்தர், தடகள விளையாட்டு பயிற்றுநர் ஜெயசந்திரன் ஆகியோர் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில் கலந்துக் கொண்டவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கெளரவித்தனர். பிரசாந்த் நன்றி கூறினார்.  தமிழியக்கம் செயலாளர் தமிழ்ச்செம்மல் புலவர் இர.நாகராஜ் நிகழ்ச்சியைத் தொகுத்து 


வழங்கினார். மேராயுவபாரத் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித்குமார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad