அட்மா திட்டத்தில் கோத்தகிரி தோட்டகலை,மலைப்பயிர்கள் துறை குருமுடியில் பயிற்சி வழங்கியது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டாரம் தோட்டக்கலை மலை பயிர்கள் துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் கோத்தகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் திரு. பரத் குமார் அவர்களின் அறிவுரையின் படி உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டுதல் என்ற தலைப்பில் குருமுடி கிராமத்தில் நடைபெற்றது. பயிற்சிக்கு ஊர்தலைவர் திரு. தேவராஜ் அவர்கள் தலைமை வகித்தார்.இப்பயிற்சியில் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரு. பிரசாந்த் அவர்கள் தோட்டக்கலை துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய திட்டங்கள் குறித்தும், வேளாண் மதிப்பு கூட்டுதலில் உள்ள பயன்கள் குறித்தும் விளக்கினார். கூக்கல் தொரை R R Foods நிறுவனத்தின் தலைவர் திருமதி. ஆஷா அவர்கள் காய்கறி பயிர்களான கேரட், பீட்ரூட் மற்றும் சுகினி ஆகியவற்றை சூரிய மின் உலர்த்தி மூலம் மதிப்பு கூட்டி பொடியாக்கும் முறைகள் குறித்தும் தேயிலை பயிரில் கிரீன் டீ மற்றும் சில்வர் டிப் டீ தயாரிக்கும் முறைகள் குறித்தும் விளக்கினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் திரு. சர்குணசீலன் விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடியில் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் தடுப்பு முறைகள் குறித்து விவரித்தார்.இப்பயிற்சியில் குருமுடி பகுதியை சார்ந்த 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment