கூடலூர் உப்பட்டி பாரத மாதா மெட்ரிக் பள்ளியில் NCC கூட்டுப் பயிற்சி முகாம்.
நீலகிரி மாவட்டம் 31 தமிழ்நாடு தனி அணி NCC அமைப்பு சார்பில் கூடலூர் பாரதமாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மே 26 முதல் ஜூன் 4 வரை NCC கூட்டுப் பயிற்சிமுகாம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. துவக்க விழா நிகழ்ச்சியில் பாரதமாதா பள்ளியின் முதல்வர் பிஜூ அவர்கள் வரவேற்றார்.
முகாமானது நீலகிரி மாவட்ட கமாண்டர் கர்ணல் சித்து அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. மாணவ மாணவிகளுக்கு காலை யோகா, ராணுவ நடைப்பயிற்சி, பல்வேறு துப்பாக்கிகளை கையாளும் பயிற்சி, மேப் ரீடிங், விளையாட்டு போட்டிகள் மற்றும் நடனப்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இம்முகாமில் மேட்டுப்பாளையம் SVGV பள்ளி, குன்னூர் ஜோசப் பள்ளி, புனித அந்தோனியார் பள்ளி, காட்டேரி NS அய்யா, உதகை CSI, CMM பள்ளி, ஜோசப், மஞ்சூர்,சிவசைலம் சாம்ராஜ் நஞ்சநாடு ஏகலைவா எடக்காடு கூடலூர் மானிங்ஸ்டார் தேவர்சோலை தாமஸ் பள்ளி அய்யன்கொள்ளி உதகை கலைக்கல்லூரி கூடலூர் நீலகிரி கலைக்கல்லூரி தாளூர் மற்றும் CSI பொறியியல் கல்லூரி உட்பட 450 மாணவ, மாணவிகள் பயிற்சி பெறுகின்றனர்.
பயிற்சிகளை NCC அலுவலர்கள் ராஜ், சுப்ரமணியன், ஜேக்கப், ஜாய் தாமஸ், சீனிவாசன், புண்ணிய மூர்த்தி, ரேவதி, தாரணி, அருண், விஜய் ஆனந் , டேவிட், சுபேதார் ஜலன், ஜஸ்வீர் சிங், அவில்தார் திவாரி, ஜேம்ஸ், சதீஸ், இந்திரன், மணிகண்டன் ஆகியோர் தருகின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment