கூட்டுறவு கடன் -நீலகிரி விவசாயிகள் முதல்வரை சந்திக்க முடிவு.
நீலகிரி மாவட்டத்தில் காரட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் உள்ளிட்ட விவசாய பொருட்களை ஒரு ஏக்கரில் பயிரிட ரூபாய் 2 இலட்சம் செலவாகிறது. நீலகிரி விவசாயிகள் இரண்டு இலட்சம் வரை பயிர்க்கடன் பெற்றுள்ளனர். நீலகிரி மலை காய்கறிகள் விவசாயத்திற்க்கு மிகுந்த செலவு ஏற்படுவதால் நஷ்டத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த ஐந்து ஏக்கர் வரை நிலம் உள்ள சிறு குறு விவசாயிகள் பெற்ற கூட்டுறவு கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்ததை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.
நீலகிரி விவசாயிகள் மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு வேளாண்மை துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து நீலகிரி மாவட்டத்திற்க்கு மட்டும் சாகுபடி செலவு அதிகமாக உள்ளதால் இரண்டு லட்சம் வரை விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்யவும் நீலகிரி விவசாயிகள் வன விலங்கு மற்றும் இயற்கை பேரிடரால் சந்திக்கும் நஷ்டங்கள் குறித்தும் விளக்கி நீலகிரி விவசாயிகளுக்கு சலுகைகள் அளித்திட வேண்டி நீலகிரி விவசாயிகள் குழு சென்னை செல்ல உள்ளதாக விவசாயி மற்றும் இயற்கை ஆர்வலர் ஆன இளித்துறை திரு. விஸ்வநாதன் அவர்கள் கூறினார். நீலகிரி விவசாயிகள் குழுவுடன் செல்ல விருப்பமுள்ள விவசாயிகள் 97874 00567 என்ற அலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment