உதகை கிரெஸென்ட் பள்ளியின் (CRESCENT) தொடர் சாதனை. சாதித்த மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
CISCE தேர்வு முடிவுகள் – 2025–26 சிறப்பின் மரபு (A Legacy of Excellence) “கல்வி என்பது வலுக்கட்டாயமாக மனதை உடைப்பதல்ல; அன்பின் மூலம் அதைத் திறப்பதே ஆகும்.”
ஒரு வெற்றிகரமான கல்வி நிறுவனத்திற்கு தெளிவான நோக்கும் உறுதியான அர்ப்பணிப்பும் அவசியம். அன்பு பெற்றோர்களும் ஆசிரியர்களும் காட்டிய பொறுமையும் அக்கறையும் இன்று இனிய பலனை அளித்துள்ளது.
ஒரு மாணவனின் கனவு மாயையால் நனவாகாது; அதற்கு வியர்வை, விடாமுயற்சி, கடின உழைப்பு அவசியம். அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் வழங்கிய வழிகாட்டுதலால், மாணவர்கள் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளத் தயார் நிலையில் உருவாகியுள்ளனர்.
இந்த மிகச் சிறந்த சாதனைக்காக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தொடக்கம் முதலே CRESCENT கல்வி நிறுவனம் உயர்ந்த தரத்தைக் கடைப்பிடித்து வருகிறது. இக்கல்வி குழுமத்தின் தலைவர் மற்றும் தாளாளர் திரு.உமர் பாரூக்கின் உயர்ந்தோங்கிய சிந்தனை,தொலைநோக்கு பார்வை காரணமாக தொடர்ச்சியாக, ICSE (10ஆம் வகுப்பு) மற்றும் ISC (12ஆம் வகுப்பு) பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்று, பலர் சிறப்புத்தரத்திலும் மற்றவர்கள் முதல் தரத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முதல் நிலை மாணவர்கள் (TOPPERS)
ICSE – 10ஆம் வகுப்பு
அஷ்வினி ஜே – 95.2%
லக்ஷாந்த் வி – 94.4%
எனோக் ரூபன் – 94.2%
தர்ஷனா ஸ்ரீ எம் – 94.2%
ISC – 12ஆம் வகுப்பு
அங்கிதா எம்.பி – 96.75%
பவேஷ் ரமணா – 96.50%
சியோனா பௌலெட் – 96.25%
“Resilience (மீண்டு எழும் உறுதி)” என்ற ஒரு சொல் இச்சாதனையை விவரிக்கிறது.
அங்கிதா மற்றும் அஷ்வினி ஆகியோரின் இந்த சாதனை, எந்த தடைகளையும் மீறி வெற்றி பெறும் மனவலிமையின் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு...


No comments:
Post a Comment