முகமூடி திருடன் கைது:
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் கூடலூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் தேவர்சோலை காவல் நிலைய ஆய்வாளர் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்த பாடந்துறை மற்றும் 3 டிவிசன் மற்றும் சேரம்பாடி பகுதிகளில் வீடுகளை உடைத்து திருடிய முகமூடி அணிந்து வந்த மர்ம நபரை நேற்று கேரள மாநிலம் கண்ணூரில் வைத்து தேவர் சோலை தனிப்படை போலீசார் மற்றும் கேரளா மாநிலம் வயநாடு தனிப்படை போலீசாருடன் இணைந்து கண்ணூரைச்சேர்ந்த ஆலக்கோடு முகமது (46 )மற்றும் கேரளா மாநிலம் வயநாடு கம்பலகாட்டைச்சேர்ந்த ஜோஸ் (72) என்பவர்களை கைது செய்து விசாரணை செய்து சிறையில் அடைக்கப்பட்டது.மேலும் இவர்கள் இருவருக்கும் 140 க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது
இதில் திறன்பட செயல்பட்டு திருடனை கண்டுபிடித்த தேவர் சோலை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் போலீஸாருக்கு பொதுமக்கள் வாழ்த்துக்களையும் நன்றியினையயும் தெரிவித்தார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment