மனித மிருக மோதலை தடுக்க வேண்டி அவசர ஆலோசனை கூட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 May 2026

மனித மிருக மோதலை தடுக்க வேண்டி அவசர ஆலோசனை கூட்டம்


 மனித மிருக மோதலை தடுக்க வேண்டி அவசர ஆலோசனை கூட்டம்


கூடலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து மக்களைத் தாக்குவதால் உயிர்ச் சேதங்கள் மற்றும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது குறிப்பாக, பாக்கனா பகுதியில் யானை தாக்கி சிறுவன்  உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கூடலூர் தொகுதி மக்களிடையே பெரும் அச்சமும் பதற்றமும் நிலவி வருகிறது. காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்கவும், பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உடனடி மற்றும் நிரந்தர தீர்வுகளை நடைமுறைப்படுத்தவும் வேண்டியதன் அவசியம் குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு  தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பிருந்தா கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் மு.திராவிடமணி மாவட்ட வன அலுவலர்  தேவராஜ் முன்னிலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி கலந்து கொண்டு, தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வலியுறுத்தினார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad