கோத்தகிரி கிளை நூலகத்தில் கோடை பயிற்சி முகாம் நிறைவு விழா.
நீலகிரி மாவட்ட பொது நூலகத்துறை கோத்தகிரி கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டத்தின் சார்பாக பள்ளி மாணவர்களுக்கான கோடை பயிற்சி முகாம் நிறைவு விழா கோத்தகிரி பொது நூலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவர் முனைவர் லிங்கன் அவர்கள் தலைமை தாங்கினார். நீலகிரி மாவட்ட நூலகர் திரு. கிளமெண்ட் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். கோத்தகிரி குடிமக்கள் மன்ற தலைவர் வழக்குரைஞர் முருகன், சாய் நிவாஸ் மன்ற செயலாளர் தருமன் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் கே .ஜே. ராஜு, கீ ஸ்டோன் அமைப்பின் களப்பணியாளர் மாணிக்கம், மற்றும் அனுஷா, கோத்தகிரி பஞ்சாயத்து ஊராட்சி ஒன்றிய தலைவர் திருமதி .ஜெயக்குமாரி மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினார்கள். கோடை முகாம் நிகழ்வாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. முன்னதாக கிளை நூலகர் திருமதி . அமுதா அனைவரையும் வரவேற்றார். வாசகர் வட்ட நிர்வாகி ஆசிரியர் ராஜ்குமார் நன்றி கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment