எமரால்டு காந்திகண்டி பகுதியில் காட்டெருமை உயிரிழந்தது
நீலகிரி மாவட்டம் எமரால்டு அருகே உள்ள காந்திகண்டி பகுதியில் இன்று காலை காட்டெருமை ஒன்று உயிரிழந்தது இதனைக் கண்டு அப்பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் பெயரில் விரைந்து வந்த வனத்துறையினர் கால்நடை மருத்துவ குழுவினரை அழைத்தனர் அதன் பெயரில் முள்ளிமலை மருத்துவமனையைச் சேர்ந்த உதவி கால்நடை மருத்துவர் முகம்மது சுஹைப் மற்றும் இத்தலார் உதவி கால்நடை மருத்துவர் கோவிந்தசாமி மற்றும் காந்தி கண்டி பகுதியைச் சார்ந்த கால்நடை ஆய்வாளர் கணேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் வருகை தந்து உயிரிழந்த காட்டெருமை உடற்கூறு ஆய்வு செய்தனர் அதன் பின் வனத்துறையினர் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் அந்த காட்டெருமையை நல்லடக்கம் செய்தனர் உடற்கூறு ஆய்வு பற்றிய அறிக்கை இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர் அதன் பின் இந்த காட்டெருமை எதனால் இறந்தது என்பதை தெரியவரும் என கூறியுள்ளனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment