பந்தலூர் அருகே உப்பட்டி சிறப்பு நூலகம் சார்பில் கோடைவிழா நடத்தப்பட்டது.
உப்பட்டி சிறப்பு நூலகத்தில் நடைபெற்ற கோடைவிழாவுக்குஉப்பட்டி சிறப்பு நூலக பொறுப்பு நூலகர் நித்தியகல்யாணி தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம், பாரத மாதா பள்ளி ஆசிரியர் தேன்மொழி உப்பட்டி சிறப்பு நூலக பணியாளர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உப்பட்டி வியாபார சங்க செயலாளர் ஐமுட்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார்.
உப்பட்டி , நெல்லியாளம் குந்தலாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சதுரங்கம், கேரம், லூடோ உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் விளையாடினார்கள். மேலும் பல்வேறு தலைப்புகளில் ஓவியங்கள் வரைந்தனர்.
கோடைவிழாவில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவுக்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர் சரவணன், உப்பட்டி சிறப்பு நூலக பணியாளர்கள் மற்றும் வாசகர் வட்டத்தினர், உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:
Post a Comment