செம்மனாரையில் அட்மா திட்டம் -தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டாரம் தோட்டக்கலை மலை பயிர்கள் துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் கோத்தகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் திரு. பரத் குமார் அவர்களின் அறிவுரையின் படி உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி தேனீ வளர்ப்பு என்ற தலைப்பில் செம்மனாரை கிராமத்தில் 26.05.2026 அன்று நடைபெற்றது. இப்பயிற்சியில் கோத்தகிரி வட்டார முன்னோடி விவசாயி திரு. தங்கராஜ் அவர்கள் தேனீ வளர்ப்பில் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், லாபகரமான முறையில் தேனீ வளர்ப்பு குறித்தும் எடுத்ததுரைத்தார். அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் திரு. சற்குணசிலன் அவர்கள் தேனீக்களின் வகைகள் மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்து எடுத்துரைத்தார்.உதவி தோட்டக்கலை அலுவலர் சௌமியா தோட்டக்கலை துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார். இப்பயிற்சியில் செம்மனாரை பகுதியை சார்ந்த 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

.jpg)
No comments:
Post a Comment