யானை தாக்கி மாணவன் பலி
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாக்கன்னா பகுதியில் காட்டு யானை தாக்கி 12 வயது சிறுவன் உயிரிழப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
முடிவெட்டிவிட்டு வீடு திரும்பும் போது காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த நிஷாப் என்ற சிறுவனை, அப்பகுதியினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. இது போன்ற மனித மிருக மோதலால் கூடலூர் பந்தலூர் மக்களின் உயிர்களுக்கு விலை மதிப்பு இல்லை என்று உறுதியாகியுள்ளது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment