நீலகிரி மாவட்டத்தில் அகில இந்திய என் சி சி மாணவர்களின் மழையேற்ற பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
நீலகிரி மாவட்டம் ஏகலைவா மாதிரி பள்ளியில் கோவை மண்டல என்சிசி அமைப்பின் சார்பில் அகில இந்திய என் சி சி (பள்ளி கல்லூரிகள்) மழையேற்ற பயிற்சியானது முதற்கட்டமாக மே 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது இதில் மகாராஷ்டிரா ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா கோவா கேரளா அந்தமான் லட்சத்தீவு தமிழ்நாடு பாண்டிச்சேரி மாநிலங்களை சேர்ந்த 525 மாணவியர் பங்கு பெறுகின்றனர் இதில் அன்றாடம் 12 கிலோமீட்டர் நடை பயிற்சி மற்றும் பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் எம் ஆர் சி மியூசியம் உதகை தாவரவியல் பூங்கா வானவியல் ஆராய்ச்சி மையம் ஸ்டா பெரி ,கேரட் ஆகிய பயிர்களை பயிரிடும் முறைகளையும் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது
இப்பயிற்சியினை கோவை குரூப் கமாண்டர் நீலகிரி 31 தமிழ்நாடு என் சி சி கோவை ஐந்து தமிழ்நாடு பெண்கள் என் சி சி 6 தமிழ்நாடு என் சி சி 2 தமிழ்நாடு என் சி சி போன்ற அமைப்புகளில் பயிற்சியை தருகின்றனர் முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நீலகிரி மாவட்ட கமாண்டர் கர்னல் சித்து என் சி சி முதன்மை அலுவலர் சுப்ரமணியன் செய்து வருகின்றனர்


No comments:
Post a Comment