கடும் போக்குவரத்து நெரிசலால் நிற்கும் வாகன ஓட்டிகள் சுற்றுலா பயணிகள் அவதி
நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் e-Pass நடைமுறையில் இருந்தபோதிலும், பல நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக சோதனைச் சாவடிகளில் e-Pass-கள் முறையாக பரிசீலிக்கப்படாததும், குறுகிய சாலைகளினாலும் பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டாக உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலை துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சோதனைச் சாவடிகளில் நேரடி ஆய்வு மேற்கொண்டு, பணியாளர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்.
தற்போதைய நிலை காரணமாக உள்ளூர் மக்களின் தொழில்கள் பாதிக்கப்படுவதுடன், அவர்களின் அன்றாட உரிமைகளும் சிரமத்திற்கு உள்ளாகின்றன. அரசு தலைமை மருத்துவமனையும் கூடலூர் பகுதியில் அமைந்துள்ளதால் 24 மணி நேரமும் அவசர சிகிச்சைக்கு நோயாளிகளை ஏற்றி வரும் உறுதிக்கு சென்று வர கூட மிகவும் சிரமம் அடைந்து வருகிறது எனவே, பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்து நெரிசலை சரி செய்யவும் ஆக்கிரமங்களை அகற்றி சாலை விரிவாக்கம் செய்யவும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூர் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment