உப்பட்டியில் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்ணாடி வழங்கும் சிறப்பு முகாம்: - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 29 May 2026

உப்பட்டியில் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்ணாடி வழங்கும் சிறப்பு முகாம்:


 உப்பட்டியில் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்ணாடி வழங்கும் சிறப்பு முகாம்: 

பந்தலூர், மே 30: பந்தலூர் அருகே உப்பட்டி சிறப்பு நூலகத்தில் கோடைவிழாவை முன்னிட்டு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், புளுமவுண்டன் நியர் விஷன் கலெக்டிவ், உப்பட்டி சிறப்பு நூலகம் ஆகியவை இணைந்து நடத்திய சிறப்பு இலவச கண் பரிசோதனை மற்றும் கண்ணாடி வழங்கும் முகாம் நடைபெற்றது.


முகாமிற்கு சிறப்பு நூலக பொறுப்பு நூலகர் நித்தியகல்யாணி தலைமை தாங்கினார். உப்பட்டி நூலக உதவியாளர் சங்கீதா முன்னிலை வகித்தார். கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் முகாமை துவக்கி வைத்தார். 


கண் தொழில்நுட்ப உதவியாளர் பாக்யா முகாமிற்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவக் கருவிகளைக் கொண்டு கண் பார்வைத் திறன் மற்றும் குறைபாடுகள் பரிசோதனை செய்தார். கிட்டப்பார்வை குறைபாடு உடைய 40 நபர்களுக்குத்  கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டன.


100க்கு மேற்பட்டோர் இந்த முகாமில் இலவச கண் பரிசோதனை செய்து கொண்டனர். 10 பேர் கண் புரை அறுவை சிகிச்சை பரிந்துரை செய்தனர்.


இந்த முகாமில் உப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான முதியவர்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad