அம்மா பூங்காவை சீரமைக்கக் கோரிக்கை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 31 May 2026

அம்மா பூங்காவை சீரமைக்கக் கோரிக்கை


நெலாக்கோட்டை ஊராட்சி அம்பலமூலா அம்மா பூங்காவை சீரமைக்கக் கோரிக்கை


 பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சி அம்பலமூலா கிராமத்தில் உள்ள "அம்மா பூங்கா மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம்" முழுமையாகப் பராமரிப்பின்றிப் பாழடைந்து கிடப்பதை உடனடியாகச் சீரமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையப் பொதுசெயலாளர் சு. சிவசுப்பிரமணியம் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா  தண்ணீரு தன்னீரு அவர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:


அம்பலமூலா கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காகப் பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா, தற்போது முறையான தினசரி பராமரிப்பு இல்லாததால் முற்றிலும் முடங்கியுள்ளது. பூங்கா வளாகம் முழுவதும் ஆள் உயரத்திற்கு முட்புதர்கள் மண்டி காடு போல் காட்சியளிக்கிறது. இதனால் பாம்பு, தேள் போன்ற விஷஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்து, அப்பகுதி மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.


மேலும், சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சல், சீசா மற்றும் உடற்பயிற்சிக் கூடக் கருவிகள் அனைத்தும் துருப்பிடித்தும், உடைந்தும் ஆபத்தான நிலையில் கிடக்கின்றன. பூங்காவில் காவலாளி இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் இது மாறி வருகிறது.


எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, ஜே.சி.பி இயந்திரம் மூலம் புதர்களை அகற்ற வேண்டும். உடைந்த விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி கருவிகளைப் பழுதுநீக்கி, பூங்காவை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad