நீலகிரி கோடைவிழா- குன்னூரில் 66 வது பழக் காட்சி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 May 2026

நீலகிரி கோடைவிழா- குன்னூரில் 66 வது பழக் காட்சி



நீலகிரி கோடைவிழா- குன்னூரில் 66 வது பழக் காட்சி.

நீலகிரி மாவட்டத்தில் கோடை விடுமுறையில் கோடை விழா மே மாதம் முழுவதும் ஆண்டுதோறும் நடைபெறும். காய்கறி காட்சி, ரோஜா காட்சி,வாசனை திரவிய கண்காட்சி,மலர் காட்சி ஆகியவையை தொடர்ந்து இறுதியாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 66 வது பழக் காட்சி மே 27 ல் தொடங்கியது. மே 30 வரை நான்கு நாட்கள் நடைபெறும். கோடை விழாவின் கடைசி நிகழ்வில்  1டன் பேரிச்சம் பழம் கொண்டு டைனோசர், ஜுராசிக் பார்க் நுழைவு வாயில் , முட்டையிலிருந்து டைனோசர் வெளி வருதல் மற்றும் டைனோசர் காலத்து பறவை போன்ற வடிவமைப்புகள் 4.5 டன் எடையுள்ள பழங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 

தோட்டக்கலைத்துறை மூலம் அறங்கு அமைத்து 160 வகையான பழங்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் அரங்குகள், மற்றும் போட்டியாளர்கள் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ் நாட்டின் பிற மாவட்ட பழங்களை பறைசாற்றும் வகையில் பிற மாவட்ட தோட்டக்கலை துறையினரால் அதியமான் கோட்டை, இருவாச்சி பறவை, மரகத புறா, இரட்டை மயில், பவானிசாகர் அணை, கழுகு மற்றும் வீணை போன்ற  உருவங்கள் பல்வேறு பழங்களை கொண்டு வித விதமாக  காட்சி படுத்தப்பட்டுள்ளது.  சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad