கோத்தகிரி கிளை நூலகத்தில் கோடை பயிற்சி முகாம்.
நீலகிரி மாவட்ட நூலகத்துறை கோத்தகிரி கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டத்தின் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு ஒரு மாத கால கோடை முகாம் கோத்தகிரி கிளை நூலகத்தில் நடத்தப்படுகிறது. இந்த முகாமின் துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவர் அரிமா கோபால் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தமது தலைமை உரையின் போது மாணவர்களுக்கு அவர்களுடைய அறிவுத்திறன் மேம்படுத்தும் வகையில் பல கற்றல் நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் நடத்தப்படும் எனக் கூறினார். கோத்தகிரி குடிமக்கள் மன்ற தலைவர் ஆசிரியர் ராஜ்குமார் செயலாளர் வழக்குரைஞர் முருகன் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் கே .ஜே . ராஜு உபதலை சாய் நிவாஸ் ஆன்மீக அமைப்பின் செயலர் தர்மன் ஓய்வு பெற்ற வட்டார கல்வி அலுவலர் மாதன் கீ ஸ்டோன் அமைப்பின் கள அலுவலர் மாணிக்கம் கோத்தகிரி கிளை நூலகர் 'நல் நூலகர்' விருது பெற்ற திருமதி. அமுதா மற்றும் சதுரங்க பயிற்சியாளர் செந்தில்குமார் கோத்தகிரி வானொலி நிலைய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திருமதி. அனுஷ்யா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னதாக வாசகர் வட்ட துணைத் தலைவர் முனைவர் லிங்கன் வரவேற்புரை நிகழ்த்தினார். வாசகர் வட்ட புரவலர் மோகன் நன்றி கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment