சித்தகிரி ஶ்ரீ சாய் CBSE இலவச கல்வி.
நீலகிரி மாவட்டம் குன்னூர் எடப்பள்ளியில் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்துள்ளது சித்தகிரி ஶ்ரீ சாய் தர்மஸ்தலம். அம்மா சக்தி மாயி அவர்களால் திறம்பட இலவச மக்கள் சேவையாற்றப்பட்டு வருகிறது. சித்தகிரி ஶ்ரீ சாய் தர்மசலாவில் தினமும் பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்று வந்த நிலையில் இலவச மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டு தினமும் 150 ம் அதிகமான மருத்துவ பயனாளர்கள் பயன் பெற்று வருகின்றனர் குறுகிய காலத்தில் 100 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது சாதனையே. ஆன்மீகத்துடன் மருத்துவ சேவையையும் ஆற்றி வந்து தற்போது கல்வி சேவையிலும் அடியெடுத்து வைத்துள்ளார்கள். ஏப்ரல் 12 ஞாயிறு காலை 11 மணிக்கு CBSE கல்வி திட்டத்தின் கீழ் 1 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவு தேர்வு நடைபெறுகிறது. மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி மற்றும் உணவு வழங்கப்படுகிறது போக்குவரத்து வசதியும் இலவசமாக வழங்கப்படுகிறது. கல்வியாளர்களும் வியந்து பாராட்டும் இந்த சேவையை வழங்கும் அம்மா சக்தி மாயி அவர்களை வணங்கி நன்றி கலந்த வணக்கங்களை தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment