கூடலூர், தோட்டத் தொழிலாளர் தொழிற் பயிற்சி நிலையம் – தேர்தல் 2026 முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 9 April 2026

கூடலூர், தோட்டத் தொழிலாளர் தொழிற் பயிற்சி நிலையம் – தேர்தல் 2026 முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 


கூடலூர், தோட்டத் தொழிலாளர் தொழிற் பயிற்சி நிலையம் – தேர்தல் 2026 முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி


கூடலூர், தேவர்சோலை சாலையில் இயங்கி வரும் தோட்டத் தொழிலாளர் தொழிற் பயிற்சி நிலையத்தில்   கூடலூர் கோட்ட கலால் அலுவலர் திரு. S. சித்தராஜ் மற்றும் கிராம் நிர்வாக அலுவலர் திரு. மோகன் குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாக்களிப்பதின் முக்கியத்தை குறித்து விளக்கமளித்தனர்.


பயிற்சி நிலைய முதல்வர் திரு. ஷாஜி M. ஜார்ஜ் அவர்கள் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். 


இந்நிகழ்ச்சியில் பயிற்சி நிலையத்தில் பயிலும் பதினெட்டு வயது நிரம்பிய மாணவர்கள் தேர்தல் 2026 தங்களின் வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற வலியுறுத்தப்பட்டது.


நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியை திருமதி. அம்மினி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad